search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வீரப்பன் என்கவுண்டர்"

    வீரப்பன் என்கவுண்டரில் பதக்கம் பெற்ற மாதவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தனக்கு பதவி உயர்வு கிடைக்காத விரக்தியில் ராஜினாமா செய்ய உள்ளார். #MadhavaramPoliceInspector
    சென்னை:

    சென்னை மாதவரம் சட்டம்-ஒழுங்கு போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் ஜவகர்.

    1997-ம் ஆண்டு சப்- இன்ஸ்பெக்டராக பணியில் சேர்ந்த இவர் 2004-ம் ஆண்டு சந்தன கடத்தல் வீரப்பனை தேடும் சிறப்பு படையில் இடம் பெற்றிருந்தார்.

    அந்த சமயத்தில் போலீசாரால் வீரப்பன் ‘என் கவுண்டர்’ செய்யப்பட்டார்.

    போலீசுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்டதால் சிறப்பு படையில் இடம் பெற்றிருந்த போலீசார் முதல் உயர் அதிகாரி வரை அனைவருக்கும் அப்போது முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா ரூ.3 லட்சம் ரொக்கப் பரிசு, பதக்கம், வீட்டுமனை மற்றும் பதவி உயர்வு வழங்கி கவுரவப்படுத்தினார்.

    அதன் பிறகு இன்ஸ்பெக்டரான ஜவகருக்கு இதுவரை பதவி உயர்வு ஏதும் கிடைக்கவில்லை. 15 வருடங்களுக்கு மேலாக உதவி கமி‌ஷனராக பதவி உயர்வு கிடைக்காததால் போலீஸ் உயர் அதிகாரிகளை சந்தித்து முறையிட்டார். ஆனாலும் பலன் இல்லை. இதனால் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    சுப்ரீம்கோர்ட்டும் இவரது பதவி உயர்வு சம்பந்தமாக அரசு பரிசீலிக்கலாம் என்று கூறியது. ஆனாலும் இதுவரை ஜவகருக்கு பதவி உயர்வு கிடைக்கவில்லை.

    இதனால் மனம் வெறுத்த ஜவகர் தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளார். போலீஸ் கமி‌ஷனரை சந்தித்து இன்று ராஜினாமா கடிதம் வழங்க உள்ளார்.



    இதுபற்றி இன்ஸ்பெக்டர் ஜவகரிடம் கேட்டதற்கு அவர் கூறியதாவது:-

    போலீஸ் துறையில் எனக்கு வெகுமதி, அவார்டு, பதவி உயர்வு என அத்தனை பெருமைகளையும் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா எனக்கு வழங்கி கவுரவப்படுத்தினார்.

    ஆனால் அதன் பிறகு எனக்கு கிடைக்க வேண்டிய பதவி உயர்வு எதுவும் கிடைக்கவில்லை.

    எனக்கு பிறகு இன்ஸ்பெக்டரான 500-க்கும் மேற்பட்டோர் இப்போது உதவி கமி‌ஷனராக உள்ளனர். எனக்கு சல்யூட் அடித்தவர்களுக்கு நான் இப்போது சல்யூட் அடித்து கொண்டிருக்கிறேன்.

    ஜெயலலிதா கொடுத்த பதவி உயர்வை கணக்கில் எடுக்காமல் பழைய சர்வீஸ் படி எனது சீனியாரிட்டியை பார்க்கின்றனர்.

    இது தவறு என்று கூறி கோர்ட்டுக்கு சென்றேன். சுப்ரீம்கோர்ட்டும் எனது கோரிக்கையை அரசு பரிசீலிக்கலாம் என்று கூறி உள்ளது. ஆனாலும் எனது கோரிக்கையை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. முதல்-அமைச்சருக்கு தவறான தகவலை அதிகாரிகள் சொல்கிறார்கள்.

    எனவே அவமரியாதையுடன் பணியில் வேலை செய்வதை விட ராஜினாமா செய்வதே மேல் என்ற நிலைக்கு வந்து விட்டேன். அதனால் போலீஸ் கமி‌ஷனரை சந்தித்து எனது ராஜினாமா கடிதத்தை வழங்க உள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #MadhavaramPoliceInspector
    ×